கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

Update: 2024-07-06 06:18 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர்

பெரம்பலூர் மாவட்டம் துணிச்சலான மற்றும் வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு 2024-ம் ஆண்டிற்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தகவல். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துணிச்சலான மற்றும் வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது – 2024-ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்விருது தங்கமூலம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கத்துடன் ரூ.5,00,000/- (ஐந்து லட்சம்) ரொக்க பரிசும் வழங்கப்படும். இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட பெண்ணாகவும், துணிச்சலான மற்றும் வீர தீர சாகசச் செயல் புரிந்திருக்க வேண்டும். எனவே, இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 08/07/2024 அன்று மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்து, பதிவு செய்த விவரத்தினை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் அணுகி விண்ணப்பம் செய்த விவரத்தினை தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News