சிதிலமடைந்த தண்ணீர் தொட்டி சரிசெய்ய வலியுறுத்தல்:
சின்னமணலியில் சிதிலமடைந்து காணப்படும் தண்ணீர் தொட்டியை சரி செய்ய வலியுறுத்தல்;
By : King 24x7 Website
Update: 2024-01-02 17:36 GMT
சின்னமணலியில் சிதிலமடைந்து காணப்படும் தண்ணீர் தொட்டியை சரி செய்ய வலியுறுத்தல்
எலச்சிபாளையம் அடுத்த, சின்னமணலி கிராமத்தில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர், மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்சமயம் இத்தொட்டியின் அடிப்பாகம் ஆங்காங்கே விரிசல் அடைந்து எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அவ்வாறு இடிந்து விழுந்தால் பகுதி மக்கள் குடிநீருக்காக மிகுந்த சிரமப்படுவர். மேலும், பொதுமக்களின் மீது விழுந்து உயிர்ப்பலி கூட நேர வாய்ப்புள்ளது. ஆகவே, சிதிலமடைந்து காணப்படும் தண்ணீர் தொட்டியை புனரமைப்பு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.