கூடுதல் பணி சுமையால் தவிக்கும் பணியாளர்கள்

Update: 2023-12-15 06:25 GMT

தவிக்கும் பணியாளர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் 975 சத்துணவு அமைப்பாளர்கள், 219 சமையலர்கள், 770 உதவியாளர்கள் காலி பணியிடங்களால், கூடுதல் பணிச்சுமையில் பணியாளர்கள் தவித்து வருவதால் மதிய உணவுத் திட்டமே தடுமாற்றம் கண்டு வருகிறது. சத்துணவு உதவியாளர்கள் அமைப்பாளர், சமையலர், பணி நியமனத்துக்கான அறிவிப்பு 2017, 2020ல் வெளியிடப்பட்டு நேர்காணல் நடத்தி முடித்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் காலியிடங்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒரு மையத்தை கவனித்து வந்த சத்துணவு அமைப்பாளர் நான்கு மையங்களிலும், சமையலர்கள் மூன்று மையங்களிலும் பணியாற்றும் சூழல் தற்போது நிலவுகிறது.
Tags:    

Similar News