அஞ்சலகத்தில் முகவர்கள் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Update: 2024-01-31 00:57 GMT

வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு வேலை தேடி கொண்டிருப்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் இராணுவத்தினர்கள், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள் விண்ணபிக்கலாம். கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு வயது வரம்பு 18 வயது முதல் இருக்க வேண்டும்.  ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஒய்வு பெற்ற மத்திய மாநில அரசு அலுவலர்களும் விண்ணபிக்கலாம்  தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு செய்யும் வணிகத்துக்கேற்ப ஊக்கத் தொகை மட்டுமே வழங்கப்படும் தேர்வு செய்யப்படுவோர் ரூபாய் 5000-க்கு NSC அல்லது KVP பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அவர்கள் உரிமம் முடியும்போது பத்திரம் திருப்பித் தரப்படும். விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சலகங்களில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் அத்துடன் பான் அட்டை, ஆதார் அட்டை முகவரி சான்று, கல்வி சான்றுகளின் நகல்களை இணைத்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தூத்துக்குடி கோட்டம் தூத்துக்குடி - 628001 என்ற முகவரிக்கு 02.02.2024 தேதிக்குள் இவ்வலுவலகத்தில் கிடைக்குமாறு பதிவு தபால்/ விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும் மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி அஞ்சல் ஆயுள் காப்பீடு வளர்ச்சி அதிகாரியின் அலைபேசி எண் 9894241280ல் தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி அஞ்சலகக் கோட்டகண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News