இன்று நிச்சயதார்த்தம் - கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம் 

சுசீந்திரத்தில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய கல்லூரி மாணவி தனது காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.;

Update: 2024-05-01 03:53 GMT
சுசீந்திரம் போலீசில் நிலையத்தில் சரணடைந்த காதல் ஜோடி அபிராமி, ஜெகதீஷ்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் அபிராமி (20). இவர் சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டு அருகே உள்ள கோவிலுக்கு ஜெகதீஷ் (23) என்பவர் அடிக்கடி வந்து செல்வதில் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர்.      இவர்கள் காதல் விவரம் அபிராமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து,  அதன்படி கேரளாவை சேர்ந்த என்ஜினியர் ஒருவருடன்  திருமணம் ஏற்பாடு செய்து, இன்று (புதன்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது.

Advertisement

இந்த நிலையில் நேற்று முன்தனம் வீட்டில் இருந்த அபிராமி திடீரென மாயமானார். இது தொடர்பாக அபிராமி தந்தை சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று அபிராமி தனது காதலன்  ஜெகதீஷ் உடன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.  அமிராவின் பெற்றோர் வந்த மகளை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் அபிராமி காதலனுடன் செல்வதாக உறுதியாக இருந்தார். பின்னர் போலீசார் காதல் ஜோடியிடம் எழுதி வாங்கிவிட்டு அபிராமியை காதலனுடன் சேர்த்து அனுப்பினார். 

Tags:    

Similar News