அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர் மாவட்டம், தாந்தோணிமலைபட்டி பகுதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-06 07:07 GMT

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் கல்வி அறிவை பெறுவது மிகவும் அவசியம். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவக்கப்பட்டு செயல்பட்ட போதும், தனியார் பள்ளிகள் அதற்கு போட்டியாக வளர்ந்து வருவதும், பெரும்பாலான பொதுமக்கள் அரசு பள்ளியை தவிர்த்து விட்டு தனியார் பள்ளிகளில் ஆர்வம் காரணமாக சேர்ப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

அரசுப் பள்ளிகளில் பயின்ற பலரும் உலக அளவில் சாதனை நிகழ்த்தியுள்ளனர். மேலும் அரசு பள்ளிகளின் பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது இதனால் ஏழை எளிய மக்கள் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று கரூர் மாவட்டம், தாந்தோணிமலைபட்டி பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில் அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, புதிதாக பல்வேறு சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்று, நோட்டு புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News