மல்லாங்கிணறில் காமராஜர் சிலையை திறக்க வந்த எம்பிக்கு உற்சாக வரவேற்பு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் காமராஜர் சிலையை திறக்க வந்த கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-02-18 16:16 GMT
மலை அணிவித்த எம்பி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணர் கிராமத்தில் உள்ள எம்.எஸ்.பி செந்திகுமார நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் வெண்கல சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு வெண்கலத்தில் ஆன காமராஜரின் முழு உருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கனிமொழிக்கு பறை இசை முழங்க மாணவ மாணவியர்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் கனிமொழிக்கு ஆளுயர மாலை அணிவித்து, வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி,

பெருந்தலைவர் பெயரைச் சொன்னாலே கல்விதான் நமக்கு முன்னால் வந்து நிற்கக்கூடிய ஒன்று. மிக சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து முதலமைச்சராக உயர்ந்து, நம்முடைய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து, மூடப்பட்ட பள்ளிகளை அனைத்தும் திறந்தவர் நம்முடைய பெருந்தலைவர் காமராஜர்.

இந்தப் பகுதியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவன், ஒரு தேசிய கட்சியின் தலைவர் ஆகி இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய அளவிற்கு கிங்மேக்கர் ஆக வர முடியும் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த மேடையிலேயே ஒரு முன்னுதாரணமாக இந்த பள்ளியில் படித்த மாணவர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் யாருக்கு காசு வேண்டும் என்றாலும் அவரிடம் போய் தான் நிற்க வேண்டும்.

அவரு பெரிய மனசு பண்ணால் தான் லைட் போடுவாரு காசு கொடுப்பாரு. அவர் உங்களுடைய பள்ளி மாணவர். யார் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு கனவு காணக்கூடிய இலட்சியத்தை அடையக்கூடிய உரிமை உள்ளது. சாதிக்க கூடிய திறமை இங்குள்ள மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் உள்ளது. முடியாது என்று யார் சொன்னாலும் அந்த வார்த்தைகளை தூக்கி எறிந்து விட்டு சாதித்துக் காட்ட வேண்டும்.

அந்தத் திறமை உங்களிடம் உள்ளது என பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News