ஏற்காடு அடிவாரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஏற்காடு அடிவாரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜே.சி.ஐ. சேலம் ஸ்டீல் பெமினா சார்பில் நடந்தது;

Update: 2024-06-13 06:13 GMT
ஏற்காடு அடிவாரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஏற்காடு அடிவாரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜே.சி.ஐ. சேலம் ஸ்டீல் பெமினா சார்பில் நடந்தது

  • whatsapp icon

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஏற்காடு அடிவாரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜே.சி.ஐ. சேலம் ஸ்டீல் பெமினா சார்பில் நடந்தது. நிகழ்ச்சியில் ஏற்காட்டுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மரக்கன்றுகள், விதைப்பந்துகள், துணிப்பைகள் வினியோகம் செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் கனகராஜ், ஹரி பாஸ்கர், கருணா, வித்யாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரது கடமை என்றும், எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. சேலம் ஸ்டீல் பெமினா தலைவி டாக்டர் ஜனனி ஈஸ்வரன், திட்ட இயக்குனர் சிவசங்கரி, திட்ட உறுப்பினர் கிருஷ்ணாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News