தொழிற்சாலை கழிவுகள் எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
தொழிற்சாலை கழிவுகள் எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில், தொழிற்சாலை பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை தீயிட்டு எரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வல்லம், பிள்ளைப்பாக்கம் ஆகிய ஐந்து தொழிற்பூங்காக்களில் 1,500க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் சேகரமாகும் குப்பை, பிளாஸ்டிக்,
ரப்பர் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை. அவை, லாரிகள் மற்றும் கனரக வாகனங்களில் எடுத்து வரப்பட்டு, சாலைகள் ஓரமாகவும், ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், கொழுந்து விட்டு எரியும் தீயிலிருந்து வெளியேறும் கரும்புகை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
Pமேலும், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்."