சமூகநீதிப் பேரவையின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா

இடையன்விளையில் சமூகநீதிப் பேரவை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டடப்பட்டது.

Update: 2024-01-17 09:21 GMT

 இடையன்விளையில் சமூகநீதிப் பேரவை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டடப்பட்டது. 

நாசரேத் அருகிலுள்ள இடையன்விளையில் சமூகநீதிப் பேரவையின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

சமூகநீதிப் பேரவை நாசரேத் கிளையின் சார்பில், இடையன்விளை தேவாலய வளாகம் முன்பு சமத்துவப் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜாதி, மத பேதம் இன்றி தமிழர்களாய் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழாவினை சமூக பேரவை நிர்வாகிகள் நடத்தினர். விழாவிற்கு ஏ.எம்.விஜயராஜா தலைமை வகித்தார்.

காயல்பட்டணம் சமூகநீதிப் பேரவையின் தலைவர் அல்ஹாஜ் எம்.கே முஹம்மது அலி, கானம் பேரூராட்சி முன்னாள் தலைவர் செந்தமிழ் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகநீதிப் பேரவையின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அஹமது சாஹிபு விழாவினை  தொடக்கி வைத்தார்.  காயல்பட்டணம் சமூகநீதிப் பேரவை நிர்வாகிகள் எம்.ஐ.மூசா நைனா, எஸ்.கே.ஓய்.பசீர் அஹமது, என்.எம். தங்கத்தம்பி (எ) காதர் சாஹிபு, எம்.எம்.கப்பார் ஹஸன், அல்ஹாஜ், எம்.இ. செய்யது மூஸா, கேபா, ராம்குமார், கிங்ஸ்டன், ஹெச். கோலா ரபீக் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

பின்னர் பொது மக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. முடிவில் சமூகங்களுக்கு இடையேயுள்ள வேற்றுமை களையப்பட்டு தமிழர்களாய் நாம் ஒன்றிணைய வேண்டும் இதுதான் நமது சமத்துவ பொங்கலின் நோக்கம் என்ற மையக்கருத்தில் அடிப்படையில் அனைவரும் உறுதி ஏற்று கொண்டனர்.

Tags:    

Similar News