படவேடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல்
படவேடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.;
Update: 2024-01-16 04:53 GMT
படவேடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், ஊராட்சி செயலாளர் பவுன்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.