எருமப்பட்டி ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம்!

Update: 2024-04-02 05:28 GMT

 ராஜேஷ்குமார் எம்.பி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி கலந்து கொண்டு இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டமானது ஒன்றிய திமுக செயலாளர் பாலு (எ) பாலசுப்ரமணியம் அவர்கள் முன்னிலையில் பேரூர் திமுக செயலாளர் பழனியாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கலைவாணன், கிளை திமுக செயலாளர்கள், கிளை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News