காதல் மாறியதால் அடிதடி - நான்கு பேருடன் முன்னாள் காதலன் கைத
மயிலாடுதுறை அருகே திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியை சேர்ந்த பெண் ஒருவரை இரண்டு பேர் காதலித்து வந்த நிலையில் ஒருவர் வெளிநாடு சென்று திரும்பிய போது முதல் நபருடன் காதலியை பார்த்ததும் கோபம் கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து காதலியின் புதிய காதலனை அடித்து உதைத்த வழக்கில் நான்கு பேர் கைது.;
Update: 2024-03-26 17:31 GMT
காவல்துறை விசாரணை
மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் தனவேந்தன் (19) இவரும் பேரளத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கிருஷ்ணன்( 21 )என்பவரும் கொல்லுமாங்குடி அகரமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தனர் . இதற்கிடையே கிருஷ்ணன் வெளிநாடு சென்று விட்டார். இந்த நேரத்தில் தனவேந்தனும் அந்தப் பெண்ணும் காதலித்துவந்தனர். சம்பவ தினத்தன்று கிருஷ்ணன் நண்பர் கொல்லாபுரத்தை சேர்ந்த சுதன் (30) என்பவர் தனவேந்தனை பார்த்து, கிருஷ்ணன் வந்துவிட்டான் ஊரில் தான் இருக்கிறான் வந்து பார் என்று கூப்பிட்டுள்ளார். இது குறித்து தனவேந்தன் மகேந்திரன் அருகே உள்ள களநிவாசல் காளி ஆலயம் பக்கம் சென்றபோது அங்கே வந்த கூத்தனூரை சேர்ந்த கீர்த்தி வாசன் (19 )அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், ககொல்லாபுரத்தைச் சேர்ந்த சுதன் ஆகியோர் தனவந்தனை வழிமறித்து அடித்து உதைத்து கட்டையால் தாக்கி கையில் வைத்திருந்த கத்தியால் கிழித்து காயம் ஏற்படுத்திவிட்டு ஓடிவிட்டனர். காயம் பட்ட தனவேந்தன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.