முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முத்தமிழ் தேருக்கு உற்சாக வரவேற்பு.

Update: 2023-11-21 07:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பன்முகத்தன்மையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார ஊா்தி வலம் வருகிறது.கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பயணம் அனைத்து மாவட்டத்துக்கும் சென்று டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.கருணாநிதி பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊா்தி இன்று கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. அலங்கரிக்கப்பட்ட முத்தமிழ் தேர் ஊர்திக்கு மேள தாளங்கள் முழங்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவி மாணவிகள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.பேனா வடிவிலான ஊர்தியை பார்த்ததும் உற்சாகமடைந்த பள்ளி மாணவிகள் துள்ளி குதித்து மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இதையடுத்து ஊா்தியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா வழங்கியதுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை படித்து அதில் உள்ள நெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டுமென  கேட்டுக்கொண்டார்.முத்தமிழ் தேரை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
Tags:    

Similar News