கொள்ளை வழக்கில் முன்னாள் மேலாளருக்கு மூன்றாண்டு சிறை

கெங்கவல்லி தனியார் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் முன்னாள் மேலாளருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2024-05-26 12:58 GMT

கெங்கவல்லி தனியார் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் முன்னாள் மேலாளருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


கெங்கவல்லி:கெங்கவல்லி தனியார் நிதி நிறுவனத்தில்694 பவுன் நகை மற்றும் 1.34 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் முன்னாள் மேலாளருக்கு மூன்றாண்டு சிறை; ஆத்தூர் நீதிமன்றம் உத்தரவு சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேருந்து நிறுத்தம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய மேலாளர் முருகேசன் உள்ளிட்ட ஊழியர்கள் நகைகள் மற்றும் பணத்தை லாக்கரில் வைத்து அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இரு நாள் விடுமுறைக்கு பின் அலுவலகத்தை திறந்த போது லாக்கர் திறக்கப்பட்டு ஆறு பெட்டிகளில் இருந்த 694 பவுன் (5.5 கிலோ) நகைகள், ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அப்போது ஆத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த மருதை மணி (41) அதே கிளையில் மேலாளராக பணிபுரிந்து நிலையில் அவர் வேறு ஒரு பகுதிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவர் பணிக்கு செல்லாமல் ராஜாஜி காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தார் தனிப்படை போலீசார் அவரை பிடித்து விசாரித்தது நகை பணம் கொள்ளை அடித்தது தெரியவந்தது. மருதை மணியை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து நகை பணத்தை மீட்டனர் இந்த வழக்கு ஆத்தூர் குற்றவியல் நீதி நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதில் குற்றம் சாட்டப்பட்ட மருதை மணிக்கு மூன்றாண்டு சிறை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் அருண்குமார் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News