திருப்பூரில் முன்னாள் மேயர் வாக்களிப்பு

திருப்பூரில் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் மேயர் இல. பத்மநாபன் மற்றும் விசாலாட்சி தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

Update: 2024-04-19 12:37 GMT
திருப்பூரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் முன்னாள் மேயர் அமமுக மாவட்ட செயலாளர் விசாலாட்சி ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் இன்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர், திமுக கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் கோவில்வழி பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயர் அமமுக மாவட்ட செயலாளர் விசாலாட்சி பட்டுக்கோட்டையார் நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Tags:    

Similar News