கபிஸ்தலத்தில் முன்னாள் அமைச்சா் பிறந்தநாள் விழா

கபிஸ்தலத்தில் முன்னாள் அமைச்சா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-29 06:44 GMT

இரா. துரைக்கண்ணு

கபிஸ்தலத்தில் முன்னாள் அமைச்சா் பிறந்தநாள் விழா மறைந்த அதிமுக முன்னாள் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான  இரா. துரைக்கண்ணு வின் 76 ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி  கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில்அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலா் எம். ரெத்தினசாமி தலைமையில் மாவட்ட பாசறை செயலா் துரை. சண்முக பிரபு முன்னிலையில் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் கே. கோபிநாதன், தியாகை. பழனிச்சாமி, நகர செயலா் கோவி.சின்னையன், சாா்பு அணி நிா்வாகிகள் சிவக்குமாா்,கண்ணன்,பி.கே. முருகதாஸ், ஜெனட் ஆனந்தி, டி. மணி, ஏா்டெல் சதீஷ்,முருகன், பாலகிருஷ்ணன்,ரவி மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர நிா்வாகிகள்  கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News