சிறுமிக்கு பாலியல் முன்னாள் ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் முன்னாள் ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.
Update: 2024-03-27 02:13 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் விக்ரமன் என்று செல்வராஜ் (59). முன்னாள் ராணுவ வீரர். அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுமி முயலுக்கு விளை நிலத்தில் புற்கள் பறிக்க சென்றார். அப்போது அந்த வழியே வந்த செல்வராஜ் சிறுமியின் அருகே சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று அளித்த தீர்ப்பில் செல்வராஜ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தொகை கட்ட தவறினால் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு வக்கீல் முத்துமாரி ஆஜர் ஆனார்.