பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-26 12:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பெரிய தள்ளப்பாடி, என், வெள்ளாளப்பட்டி, கெரிகப்பள்ளி, கோணப்பட்டி, உப்பாரப்பட்டி, வாளிப்பட்டி உட்பட பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பேனா, அளவுகோல், கவராயம், பென்சில், பாகைமானி போன்ற தேர்வு உபகரணங்களை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் வழங்கி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் காளியப்பன், செந்தில், உமாபாரதி, சரவணன், ஆசிரியர்கள் கனகா, ஜெகநாதன், முருகேசன், ஏழுமலை, ஜெயந்தி, முருகன், சுரேஷ், பொன்தவமணி, ரேவதி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 15 ஆண்டுகளாக ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் கணேசன் தேர்வு உபகரணங்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பு படிக்க தேவையான சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களையும் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News