தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தூர்வாரப்பட்ட குப்பைகள் அகற்றம் !
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு வார காலத்துக்கு முன் கழிவு நீர் வாய்க்காலில் தூர்வாரப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-05 12:11 GMT
குப்பைகள் அகற்றம்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு வார காலத்துக்கு முன் கழிவு நீர் வாய்க்காலில் தூர்வாரப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்கள், தேனீர் கடைகளில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கலந்து செல்கிறது. இதனால் வாய்க்காலில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு அதில் உள்ள குப்பைகள் அகற்றி வாய்க்கால் கரைகளிலேயே இருந்தது. இதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பயணிகளும், பொதுமக்களும் மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை மாநகராட்சி ஆணையர் இரா.மகேஸ்வரி புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது துர்நாற்றம் வீசிய குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து உடன் குப்பைகள் அகற்றப்பட்டது. ஆய்வின்போது சுகாதார மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.