சேலம் சண்முகா மருத்துவமனை சார்பில் உடற்பயிற்சி மருத்துவ முகாம்
சேலம் சண்முகா மருத்துவமனை சார்பில் உடற்பயிற்சி மருத்துவ முகாம். போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தொடங்கி வைத்தார்.
Update: 2024-05-03 04:55 GMT
சேலம் சாரதா காலேஜ் ரோட்டில் உள்ள சண்முகா மருத்துவமனை மற்றும் பிட்னஸ் ஒன் உடற்பயிற்சி நிறுவனம் இணைந்து மருத்துவ உடற்பயிற்சி பரிசோதனை முகாம் சேலம் அழகாபுரம் ஸ்ரீராம்நகரில் பிட்னஸ் ஒன் வளாகத்தில் நடந்தது. சண்முகா மருத்துவமனை நிர்வாக முதன்மை இயக்குனர் டாக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் கலந்து கொண்டு மருத்துவ உடற்பயிற்சி முகாைம தொடங்கி வைத்தார். சண்முகா மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் கண்ணன், பிட்னஸ் ஒன் உடற்பயிற்சி நிறுவன இயக்குனர் பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி. உள்ளிட்ட அடிப்படை உடல் தகுதி பரிசோதனைகள் செய்யப்பட்டன. முதன்மை செயல்பாட்டு அதிகாரி டேவிட் வரவேற்றார். முகாமில் உடற்பயிற்சி பயிற்சியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து டாக்டர் பிரபுசங்கர் கூறுகையில், மருத்துவ முகாமில் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான ரத்த பரிசோதனைகளுக்கு சிறப்பு சலுகையாக ரூ.999-க்கு செய்யப்படுகிறது. இந்த உடற்பயிற்சி மருத்துவ பரிசோதனை முகாம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது என்றார்.