மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்த விளக்கம்

மயிலாடுதுறை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2023-12-27 13:15 GMT

மயிலாடுதுறை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் 2024 ஏப்ரலிலிருந்து மே வரை நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்காளர்கள் சகஜமாக வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் தேரதல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துவருகிறது.

புதிய வாக்காளர்கள் இணைப்பது, விலாசம்மாற்றுவது, இறந்தவர்கள் பெயர்களை நீக்குவது, புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது போன்ற செயல்விளக்கங்களை செய்துகாண்பிக்கிறது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களவைத்தேரதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் முறையை மையங்கள் ஏற்படுத்தி செய்துகாட்டிவருகின்றனர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்ககு அளிப்பது குறித்தும் தேர்தல் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News