தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பாடப்பிரிவுகளில் நடப்பு 2024-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 14 வயது முதல் 40 வயது வரை ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்சவரம்புஇல்லை.இந்ததொழில் பிரிவு படிப்புகளில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர் சேர்க்கை தொடர்பான மற்ற விவரங்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இணையத ளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது உரிய ஆவணங்களுடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 மட்டும் ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும்.. வேண்டும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான கால அவகா சம் வருகிற சம் வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள மாணவ, மாணவிகள் தர்மபுரி மற்றும் அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.