ராகி கொள்முதல் ஆகஸ்ட் வரை நீட்டிப்பு

தர்மபுரி மாவட்ட ராகி கொள்முதல் மையங்களில், ராகி கொள்முதல் செய்ய வரும் ஆகஸ்ட் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என, மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-14 09:10 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி  வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு, பொது வினியோக திட்டத்தின் கீழ், ஊட்டச் சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சோதனை அடிப்படையில், ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன் றுக்கு அரிசிக்கு பதில், 2கிலோ ராகி வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதற்காக, சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 19 முதல் தர்மபுரி, பென்னாகரம், அரூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட ராகி கொள்முதல் மையம் மூலம், ராகி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

பிப்ரவரி வரை ராகி கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து, தமிழக அரசு வரும் ஆகஸ்ட் மாதம் வரை, தர்மபுரி, பென்னாகரம், அரூர் ஆகிய பகுதிகளில் உள்ள ராகி கொள்முதல் மையங்களில், ராகி கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் ராகி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இதை பயன் படுத்தி பயன்பெறலாம். ராகி கொள்முதல் மையத்தில் ஒரு கிலோ ராகி, 38.46 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கொள் முதல் மையம் காலை, 9.30 மணி முதல், 1.30 மணி வரையும், மாலை, 2.30 மணி முதல், 6.30 வரை செயல்படும். இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News