அரசு பாலிடெக்னிக்கில் மாணவர்கள் சேர கால அவகாசம் நீடிப்பு !
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்லுாரி முதல்வர் சேட்டு தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-09 05:16 GMT
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்லுாரி முதல்வர் சேட்டு தெரிவித்துள்ளார். அவரது செய்திகுறிப்பு: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், தொடர்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன. இக் கல்லுாரியில் சேர்ந்து பயில ஆண்டு கட்டணம் 2,200 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், மாணவிகளுக்கு புதுமைப் பெண் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது தவிர இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. தற்போது ஐ.டி.ஐ., மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் நேரடியாக 2ம் ஆண்டில் சேரலாம். எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றவர்கள் முதலாமாண்டில் சேரலாம். மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் கடந்த மாதம் 31ம் தேதி முடிவுற்ற நிலையில் மாணவர்கள் நலன் கருதி சேர்க்கை தேதியை குறிப்பிடாமல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லுாரியை நேரில் அணுகி பயன் பெறலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.