பைனான்ஸ் அதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டி நகைகள் பறிப்பு 

சுசீந்திரம் அருகே பைனான்ஸ் அதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டி 95 பவன் நகைகள் பறிப்பு 

Update: 2024-07-05 10:56 GMT

நகைகள் பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (40) இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தங்க நகைகளை ஈடாக பெற்று பணம் கொடுப்பதுடன், வங்கியில் ஏலம் செல்ல உள்ள  நகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்து மீட்பது வழக்கம். இந்த நிலையில் இவரது  பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில வாதங்களுக்கு முன் குமரி மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வங்கியில் அடகு வைத்த தனது நகைகள் ஏலத்துக்கு செல்ல இருப்பதாகவும், அந்த நகையை மீட்டு தங்களது பைனான்ஸ் நிறுவனத்தில் மறு அடை வைத்துக் கொள்ளுமாறும்,  பின்னர் வட்டியுடன் பணத்தை தந்து நகைகளை பெற்றுக் கொள்வதாகவும்  கூறியுள்ளார். இதை அடுத்து இரண்டு வங்கிகளில் இருந்த அந்தப் பெண்ணின் சுமார் 95 பவுன் நகை தங்க நகைகளை மீட்டு நாகராஜன்  தனது பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்தார். இதன் மதிப்பு சுமார் 45 லட்சம் இருக்கு என்று கூறப்படுகிறது.       இந்த நிலையில் அந்தப் பெண் நாகராஜனை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார். தன்னிடம் 45 லட்சம் பணம் தயாராக இருக்கிறது என கூறி, சுசீந்திரம் அருகே உள்ள நண்பரின் அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை நம்பி தங்க நகைகளுடன் நாகராஜன் அந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு அந்த பெண் உள்ளிட்ட ஆறு பேர் இருந்துள்ளனர். அதில் ஒருவர் கை துப்பாக்கியை காட்டி நாகராஜனை  மிரட்டி உள்ளார்.  இதனால் பயந்து போன நாகராஜன் செய்வது தெரியாமல் தவித்துள்ளார். அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். உடனே நகைகளை கொடுத்து விட்டு ,  பயந்து வெளியே வந்த நாகராஜன் அந்த அலுவலகத்தை செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது அவரது செல்போனையும் பறித்து உடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நாகராஜன் தற்போது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News