தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி : 4 பேர் கைது
வேலூரில் தொழிலதிபரிடம் ரூ.30 லட்சத்தை வழிப்பறி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Update: 2024-06-18 02:15 GMT
வேலூர் ஆற்காடு சாலையில் ஆம்பூரை சேர்ந்த தொழிலதிபர், பிராஸ் அகமது என்பவர் கடந்த ஜூன் 7ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வியாபாரத்திற்காக கையில் வைத்திருந்த ரூபாய் 30 லட்சத்தை டூவீலரில் வந்த கும்பல் பறித்துச் சென்றனர். இதுகுறித்து பிராஸ் அகமது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், பிரசாந்த்; கருகம்பத்தூரை சேர்ந்த தினேஷ் மற்றும் குடியாத்தத்தை சேர்ந்த கோகுல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அவர்களிடமிருந்து 22 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஒரு டூ வீலரை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.