அரசு கல்லூரியில் கண் பரிசோதனை மருத்துவ முகாம்!
புளியங்குடி அரசு கல்லூரியில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-16 04:55 GMT
கண் பரிசோதனை மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அணிகள் மற்றும் சங்கரன்கோவில் ரவி கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் கண் பரிசோதனை முகாம் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ரவி கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கவிதாகண் பரிசோதனை செய்தார். இம்முகாம் மூலமாக 700 மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.