பூதப்பாண்டியில் போலி போலீஸ் ஆவணம் தயாரித்த வழக்கு - மேலும் ஒருவர் கைது

பூதப்பாண்டியில் போலியாக போலீஸ் ஆவணம் தயாரித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-07-03 04:49 GMT

காவல் நிலையம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலம் தொடர்பான பத்திரம்  தவறிவிட்டது தொடர்பாக பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பெறப்பட்டது போல் போலியாக போலீஸ் ஆவணம் தயாரிக்கப்பட்டு கொட்டாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வழங்கப்பட்டது.   இது தொடர்பாக மாவட்ட எஸ்பி சுந்தர வதனத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பூதப்பாண்டி காவல் நிலைய எஸ  ஐ லட்சுமணன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.      

Advertisement

இந்த சம்பவத்த தொடர்பாக மொத்தம் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தென்தாமரைக்குளத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை  போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.  மற்றவர்களை ஏஎஸ்பி யாங் சென் டோமா பூட்டியா தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.    இந்த நிலையில் நேற்று தேரூரை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரும் புரோக்கராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவரை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News