எடப்பாடி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
எடப்பாடி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24x7 Website
Update: 2023-10-30 11:06 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தேவூர் அடுத்துள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த தர்மராஜா (56)விவசாயி இவரது மனைவி கண்ணாயி இவர்களுக்கு சௌந்தரராஜன், குணசேகரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தர்மராஜா கடந்த சில மாதங்களாக கிட்னி பெயிலியரால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவர் அவதி அடைந்து வந்தார். நேற்று தர்மராஜா வழி தாங்க முடியாமல் விஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.