வீரவநல்லூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம்,வீரவநல்லூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-24 09:15 GMT
தற்கொலை
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள அரிகேசவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். விவசாயியான இவர் தனது மூத்த மகன் காளிமுத்துக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய ஒருவரிடம் மூன்று லட்சம் வழங்கி உள்ளார்.
ஆனால் வேலை கிடைக்காததால் விரத்தி அடைந்த சுப்பிரமணியன் நேற்று (பிப்.23) பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.