உடல்நிலை பாதிப்பால் விவசாயி தற்கொலை
பஞ்சப்பள்ளி அருகே உடல்நிலை பாதிப்பு காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-06-14 17:36 GMT
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி அடுத்த வேடம்பட்டியில் வசித்து வந்தவர் சிவராஜ் விவசாயியான இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர்.
இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வயிற்று வலி குணமாகாததால் விரக்தியில் காணப்பட்டவர் மதுவில் விஷம் கலந்து குடித்தார். அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.