விவசாயம் பாதிப்பு - விவசாயி தற்கொலை
கள்ளகுறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-23 05:56 GMT
தற்கொலை
மணலுார்பேட்டை அடுத்த ஜம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அஜித் குமார், 25; தந்தை இறந்ததால், தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், மனமுடைந்த அஜித்குமார் கடந்த 20ம் தேதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து அவரது தாய் வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.