மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு - காவல்துறை வழக்கு பதிவு !!!
வலையாபாளையத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
வலையாபாளையத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வல்லகுளத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்ப கவுண்டர் மகன் பொன்னுச்சாமி வயது 49. விவசாயி.
இவருக்கு சொந்தமான தோட்டம் அருகில் உள்ள வலையபாளையம் அருகே உள்ள நத்தக்காடு பகுதியில் உள்ளது. தோட்டத்திற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மே 10-ம் தேதி காலை 6:30 மணியிலிருந்து 7:15- மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் சென்ற மின் கம்பி அறுந்து பொன்னுச்சாமி தோட்டத்திற்கு அமைத்திருந்த கம்பி வேலியில் விழுந்துள்ளது.
அப்போது மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் தோட்டத்திற்குச் சென்ற பழனிச்சாமி தனது தோட்ட கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை அறியாமல், தொட்டு உள்ளார்.
இதனால் மின்சாரம் தாக்கி, தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது உறவினர் பெரியசாமி என்பவர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பொன்னுச்சாமியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.