உழவுப் பணியின் போது விபத்து - விவசாயி படுகாயம்
ஏரியூர் அருகே விவசாய நிலத்தில் உழவு பணியின் போது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-09 10:48 GMT
உழவுப் பணியின் போது விபத்தில் விவசாயி படுகாயம்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே உள்ள சின்னம்பள்ளி, கரியன் காட்டுவளவை சேர்ந்தவர் விஜய் என்பவர் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். நேற்று மாலை அதே ஊரைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் விவசாய நிலத்தை டிராக்டர் மூலம் விஜய் உழுது கொண்டு இருந்தார்.
அப்போது அவர் நிலைதடுமாறி தவறி விழுந்து டிராக்டரின் சக்கரத்தின் அடி யில் சிக்கி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு கிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.