ராசிபுரம் அருகே, விவசாயி குத்திக் கொலை: மனைவி கள்ளக்காதலன் கைது
ராசிபுரம் அடுத்த உடுப்புதான்புதூர் ரயில்வே பாலம் அருகே, விவசாயி குத்திக் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது..;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 16:11 GMT
கைது செய்யப்பட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலன்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் No.3 கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல், 48. விவசாயி. இவர் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான்புதூர் ரயில்வே பாலம் அருகே தனது எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில், பழனிவேல் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இச்சம்பவம் குறித்து, வெண்ணந்தூர் போலீசார் மோப்ப நாய், கைரேகை நிபுணர் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,
வெண்ணந்தூர் போலீசார் பழனிவேலின் மனைவி செல்வி, 36. இவரின் கள்ளக்காதலன் ரவி 48 ஆகியோரை கைது செய்தனர்.