விவசாய சங்கத்தினர் அதிமுகவிற்கு ஆதரவு

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக விவசாய சங்க தலைவர் எஸ் ஏ சின்னசாமி அறிவித்துள்ளார்.;

Update: 2024-04-10 06:27 GMT

அதிமுகவிற்கு ஆதரவு

தர்மபுரி வன்னிய திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் விவசாய சங்க தலைவர் எஸ் ஏ சின்னசாமி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கிய அதிமுக கட்சிக்கு விவசாய சங்கத்தின் ஆதரவை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் கழக விவசாய அணி செயலாளர் டி ஆர் அன்பழகன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி நகரக் கழக செயலாளர் பூக்கடை ரவி கலந்து கொண்டு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. என்று முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் விவசாயிகளிடைய பேசினார்.

Advertisement

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகனுக்கு விவசாயிகளின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற கேட்டுக்கொண்டனர். தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் அதிமுக கட்சிக்கு ஆதரவு அளித்து அனைத்து விவசாயிகளும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்வோம் என்று விவசாய சங்க தலைவர் எஸ் எஸ் சின்னசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News