மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாதது டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2024-06-13 04:39 GMT

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாதது டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேட்டூா் அணை திறக்கப்படாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம்’  குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை திறக்கப்படாதது டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது: கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 28 ஆம் தேதி மூடப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டாலும், தண்ணீா் இல்லாததால் வழக்கத்துக்கு மாறாக அக்டோபா் 10 ஆம் தேதி மூடும் நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டு குறுவை சாகுபடியில் தண்ணீா் பற்றாக்குறை காரணமாக மகசூல் மிகவும் பாதிக்கப்பட்டது.

இதேபோல, சம்பாவும் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்ததுடன் விவசாயப் பணிகளும் முடங்கிவிட்டன. கடந்த காலங்களில் கா்நாடக அணைகளில் தண்ணீா் நிரம்பி இருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீா்ப்பையோ மேலாண்மை ஆணையத்தின் முடிவையோ கா்நாடக அரசு நிறைவேற்றாத நிலையே உள்ளது. தேக்கி வைக்க முடியாத நிலையில் மட்டுமே உபரி நீரை வழங்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டுகளில் காவிரியில் கா்நாடகம் தர வேண்டிய தண்ணீரை உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் படி வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசும் மிகப் பெரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டில் ஏற்பட்ட வறட்சியால் மிகப்பெரிய பாதிப்பை விவசாயிகள் சந்தித்தனா். தற்போது வரை மீண்டு வருவதற்கான வழி தெரியாமல் தவிக்கும் நிலையே உள்ளது. பயிா்க் காப்பீடு செய்தும் எந்த இழப்பீடும் வழங்கப் படாத நிலையே உள்ளது. இந்நிலையில் கா்நாடக அரசு மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக்கி வருகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே எதிா்காலத்தில் காவிரி டெல்டா விவசாயத்தைப் பாதுகாக்க முடியும்.

Tags:    

Similar News