எலுமிச்சை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் எலுமிச்சை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-26 09:15 GMT
எலுமிச்சை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் இயற்கையான குளிர்பானங்களை தயார் செய்வதற்காக அதிகப்படியான எலுமிச்சம் பழங்களை தங்களது இல்லங்களுக்கு வாங்கி செல்வதால் எலுமிச்சம் பலத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் விராலிமலை பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எலுமிச்சை பழத்தின் விலை அதிகமாக விற்பனையாகுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.