ராணிப்பேட்டையில் விவசாயிகள் சோலார் பம்பு செட்டுகள் அமைக்க அழைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சோலார் பம்பு செட்டுகள் அமைத்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-29 11:59 GMT

மாவட்ட ஆட்சியர் 

தமிழ்நாடு அரசின் மின் வினியோகத்தை குறைக்கவும், இலவச மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் சோலார் பம்புசெட்டுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் வாலாஜாப்பேட்டை உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இந்த திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்திலும்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அவர்களுக்கு 80 சதவீத மானியத்திலும் பம்பு செட்டுகள் அமைத்து கொடுக்கப்படும். சோலார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கான நிறுவனங்கள் மற்றும் விலை விவரங்கள் சென்னை தலைமைப்பொறியாளர் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது.

எனவே சோலார் பம்பு செட்டு அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள் வாலாஜாப்பேட்டை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News