கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்

கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-04-23 02:25 GMT

கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கீழ்பவானி அணையிலிருந்து கீழ்பவானி கால்வாயில் புஞ்சை பாசனத்திற்கு பாசனத்திற்கு ஐந்து நினைப்பிற்கு தண்ணீர் திறந்துவிட அரசாணை வெளியிடப்பட்டும் . ஆனால் தற்போது பவானிசாகர் அணையில் தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் விளைந்த பயிர்கள் கருகுவதை தடுக்க ஐந்தாம் நினைப்பிற்கு பத்து நாட்களாவது தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கீழ்பவானி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.இதனையடுத்து விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத்தால் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீர் திருட்டிற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் , விதிகளை மீறி அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 3 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News