விவசாயின் அஸ்தி திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மரியாதை.

பஞ்சாப் மாநிலத்தில் உயிரிழந்த விவசாயின் அஸ்தியானது திருப்பூர் குமரன் நினைவிடத்திற்கு எடுத்துவரப்பட்டு விவசாயிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-04-05 09:23 GMT

பஞ்சாப் மாநிலத்தில் உயிரிழந்த  விவசாயின் அஸ்தியானது திருப்பூர் குமரன் நினைவிடத்திற்கு எடுத்து வரப்பட்டு விவசாயிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது . வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை  தொடங்கினர்.

பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் அரியானா இடையே ஷம்பு என்ற பகுதியில்  போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு  விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்ட நடத்தப்பட்ட தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப் கரன்சிங் என்ற 21 வயது விவசாயி உயிரிழந்தார்.

இதை அடுத்து இவரது அஸ்தியானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விவசாயிகள் சார்பில்  மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது இதனிடையே  அவரது அஸ்தியானது இன்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ரவீந்தர் சிங் சார்பில் திருப்பூர் குமரன் நினைவிடத்திற்கு எடுத்துவரப்பட்டது இதை அடுத்து  விவசாயிகள்., விவசாய சங்கத்தினர்.,  சார்பில் குமரன் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்

Tags:    

Similar News