விவசாயிகள் உற்பத்தி பொருட்களை பொங்கல் பரிசாக வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாயிகள் உற்பத்தி பொருட்களை பொங்கல்பரிசாக வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர்.வேலுசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்;

Update: 2023-12-16 18:09 GMT

விவசாயிகள் உற்பத்தி பொருட்களை பொங்கல்பரிசாக வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர்.வேலுசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு விவசாயிகள் அதிகப்படியாக சாகுபடி செய்துள்ள செங்கரும்பு தமிழ்நாடு விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும் மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் நியாயவிலை கடைகள் மூலம் தமிழ்நாடு விவசாயிகள் ஆலைக்கரும்பில் இருந்து உற்பத்தி செய்யும் குண்டு வெல்லம், பச்சரிசி, பச்சைப்பயிறு மற்றும் 2 செங்கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு இந்தாண்டு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர்.வேலுசாமி, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News