தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்

கும்பகோணம் அருகே தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரியும், விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்காத மின்வாரியத்தைக் கண்டித்தும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-02 04:55 GMT

சாலை மறியல் 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அடுத்த மரத்துறையில் கடந்த ஆண்டு மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தி மின்மோட்டாா் மூலம் நிலத்தடி நீரைக்கொண்டு 90,000 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனா். நிகழாண்டு, விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ள நிலையில், 12 மணி நேரம் வழங்கப்பட்டுவந்த மும்முனை மின்சாரம் தற்போது பல மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் விவசாய பணிகளை தொடர முடியாமல் கடும் அவதியடைந்தனா். இந்நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரியும், விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்காத மின்வாரியத்தைக் கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வணங்கக்கூடிய விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்காத மின்வாரியத்தை கண்டித்தும், சாலை மறியல் போராட்டம் விவசாயி வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. இதனால் இப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பந்தநல்லூர் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News