பழனியில் கமிஷன் மண்டியை புறக்கணித்த விவசாயிகள்

பழனியில் கமிஷன் மண்டியை விவசாயிகள் புறக்கணித்தனர்.

Update: 2024-01-04 13:48 GMT

பொது இடத்தில் விற்பனை செய்யும் வியாபாரிகள்

பழநி இட்டேரி ரோடு பகுதியில் நகராட்சி கட்டுப்பாட்டில் காய்கனி கமிஷன் மண்டி கடைகள் செயல்பட்டு வருகிறது. வாகனத்திற்கு ரூ.25 சுங்க கட்டணமாக பெற்று வந்த நிலையில் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சரக்கு மூடை , பெட்டிக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு வாகனத்திற்கு ரூ.300 முதல் ரூ 500 வரை செலுத்த வேண்டியுள்ளதால் வாகன ஓட்டுனர் , விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதாக கூறி , நேற்று முன் தினம் கமிஷன் மண்டி வளாகம் முன்பு வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் சமாதனம் செய்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று விவசாயிகள் , வாகன ஓட்டுநர்கள் கமிஷன் மண்டியை புறக்கணித்து ஜவகர் நகர் தனியார் நிலத்தில் காய்கறிகளை ஏலம் விட்டனர்.

Tags:    

Similar News