அரசு மானியத்தில் விவசாயிகள் எண்ணெய்  பனை சாகுபடி  செய்யலாம்

அரசு மானியத்தில் விவசாயிகள் எண்ணெய்  பனை சாகுபடி செய்யலாம் என ஒரத்தநாடு தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-26 13:08 GMT

 அரசு மானியத்தில் விவசாயிகள் எண்ணெய்  பனை சாகுபடி செய்யலாம் என ஒரத்தநாடு தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அரசு மானியத்தில் விவசாயிகள் எண்ணெய் பனை சாகுபடி செய்யலாம் என்று ஓரத்தநாடு தோட்டக்கலை உதவி இயக்குனர் கூறியுள்ளார்.

இது குறித்து ஓரத்தநாடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சாந்திபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- உள்நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியை ஊக்குவிக்க மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில்  தஞ்சை மாவட்டத்தில் ஓரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அம்மாப்பேட்டை, பாபநாசம்,  திருவையாறு மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் சுமார் 320 எக்டேர் பரப்பில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் பனை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் மூலம் கன்றுகள் நடவு செய்தல், 4 வருடங்களுக்கான பராமரிப்பு செலவு மற்றும் ஊடு பயிர் செய்தல், அறுவடை கருவிகள் வாங்குதல் மற்றும் சொட்டுநீர் அமைத்தல் ஆகியவைகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த எண்ணெய் பனை நடவு செய்ததிலிருந்து 4 வருடத்திற்கு பிறகு மகசூலை பெறலாம். 6ஆவது வருடத்திலிருந்து எக்டேருக்கு 20 டன் முதல் 25 டன் வரை மகசூல் பெற்று லாபம் பெறலாம். அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் டன் ஒன்றுக்கு ரூ.14ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது.

எனவே ஓரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டார விவசாயிகள் நல்ல லாபம் தரக்கூடிய எண்ணெய் பனை சாகுபடி செய்து பயனடையலாம். எண்ணெய் பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News