பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகளால் விவசாயிகள் அவதி !
விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-03-14 06:00 GMT
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பகுதியில் விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகளை அப்புறப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆலவயல் ஊராட்சிப் பகுதி பொதுமக்கள் விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பகுதியில் நெல், பருத்தி மற்றும் தோட்டப்பயிர்களான கத்தரி, வெண்டை, மிளகாய் அதிகம் விளைவிக்கின்றனர். நெல், பருத்தி போன்றவை பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் காட்டெருமைகள் புகுந்துநாசம் செய்வதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியின் அருகே உள்ள வனப் பகுதியிலிலிருந்து காட்டெருமைகள் வந்து விவசாய நிலங்களை அழிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே வனப்பகுதியின் எல்லையில் வேலிகள் அமைத்து காட்டெருமைகள் வருகையை கட்டுப்படுத் வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.