மழையால் மண் பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழையால் மண் பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2024-06-03 15:31 GMT

தொடர்ந்து பெய்து வரும் மழையால் மண் பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு. தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்ட துவங்கியுள்ளதால் விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்து அட்டைகள் வழங்க விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் அதைத்தொடர்ந்து கர்நாடகா தமிழக தென் மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யும். 70% வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சராசரி அளவு மழை பெய்யும் மாவட்டங்களில் கரூரும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மீண்டும் தங்களது பணிகளை துவக்க வயலில் மண் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர். கரூர் மாவட்டத்தில் முக்கிய நதிகளான காவிரி மற்றும் அமராவதி ஆறு உள்ள நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீருக்கு பிரச்சனை இருக்காது என்பதால் விவசாயிகள் தங்கள் பணிகளை துவக்க ஏதுவாக விலை நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அட்டை வழங்கினால், மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு மகசூலை பெருக்க ஏதுவாக இருக்கும் என்பதால் விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

Similar News