விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடந்தது.;
பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் டிசம்பர் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த திட்டங்கள் குறித்து தொடர்புடைய துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், திட்டங்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது முதல்வர் பாலுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி வழங்கியமைக்கும் மாவட்டத்தில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தோட்டக்கலைத் துறை மூலம் ஆழ்த்துளை கிணறு அமைக்க மானியம் வழங்க வேண்டும் , எறையூர் சர்க்கரை ஆலை சரியான முறையில் இயங்க வேண்டும், பால்வளத் துறை மூலம் மானியத்தில் மாட்டுத் தீவனம் கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், பருத்தியில் அதிகளவில் மகசூல் கிடைக்கவும். பருத்தி விதைகளை ஆய்வு செய்து தரமான விதைகளை வழங்கவும் வேளாண்மைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்துத் துறை மூலம் ஏரிகளில் உள்ள சீமைகருவேல் மரங்களை அகற்ற வேண்டும். கல்குவாரியில் அதிகமான வெடி சத்தம் வருவதை தடுக்கவும், புழுதிகள் பறப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, வேளாண்மை இணை இயக்குநர், கீதா, மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் ராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.