விவசாயிகள் மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம்
நீர் மேலாண்மையில் தமிழகம் தோல்வி அடைந்து விட்டதாக திருவண்ணாமலை விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கும் வகையில், மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Update: 2024-01-01 10:52 GMT
தமிழகம் நீர் மேலாண்மையில் தோல்வி அடைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை. மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தினர் மொட்டை அடித்தும், நெற்றியில் நாமமிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வாழ்குடை புருஷோத்தமன் தலைமை தாங்கி பேசுகையில், ஆண்டின் மொத்த வருவாயில் 4 சதவீதம் வேளாண் துறைக்கும், மீதமுள்ள 96 சதவீதம் தொழில் மற்றும் சேவை துறைக்கும் செலவிடப்படுகிறது. வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.